search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவன் கொலை"

    திருச்செங்கோடு நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவர் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மோடமங்கலம் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 66), தறி தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    கல்யாணசுந்தரம் தன்னுடன் வேலை பார்த்த பூங்கொடி (46) என்பவரை 2-வதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். இவர்களுக்கு 21 வயதில் ஒரு மகனும், 19 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மேலும் கல்யாணசுந்தரத்திற்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

    பூங்கொடியின் நடத்தையிலும் கல்யாண சுந்தரத்திற்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. மேலும் பூங்கொடியை வேலைக்கு வரவேண்டாம் என்றும் சண்முகசுந்தரம் கூறி வந்தார்.

    நேற்று அதிகாலை 4 மணியளவில் தறிப்பட்டறை வேலைக்கு செல்வதற்காக கல்யாணசுந்தரம் புறப்பட்டார். அப்போது நானும் உங்களுடன் வருகிறேன் என பூங்கொடி கூறினார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கல்யாணசுந்தரம் என்னுடன் வந்தால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவேன் என மனைவியை மிரட்டினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பூங்கொடி கல்யாணசுந்தரத்தை தாக்கி கீழே தள்ளினார். பின்னர் ஆவேசமான அவர் கையில் இருந்த கத்தியை பிடுங்கி கல்யாணசுந்தரத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அதன் பின்னர் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து சென்று விட்டார்.

    தகவல் அறிந்து அங்கு வந்த பொதுமக்களிடம் எதுவுமே அறியாதது போல் பூங்கொடி நாடகமாடினார். பின்னர் சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது பூங்கொடி போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் கூறினார். அதன் விவரம் வருமாறு:-

    வேறு சில பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கல்யாணசுந்தரம், எனது நடத்தையிலும் சந்தேகம் அடைந்து சித்ரவதை செய்தார். இதனால் நான் மனவேதனையில் தவித்தேன். நேற்று அதிகாலையும் எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த நான் கல்யாணசுந்தரத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு நாடகமாடினேன். ஆனால் போலீசார் விசாரணையில் உண்மையை கண்டு பிடித்து என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து பூங்கொடியை கைது செய்த போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    உத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனைக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    முசாபர்நகர்:

    உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம், கேதி கெம்ரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் என்ற சோனு (வயது 31). இவரது மனைவி ஷிவானி. இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரிஷ் காணாமல் போனார். இதுபற்றி அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹரிஷின் மைத்துனர் சிவம் மற்றும் உறவினர் மோகித் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். ஹரிஷின் மனைவி ஷிவானியின் பெயரும் புகாரில் சேர்க்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே ஹரிஷின் உடல் கடந்த 15ம் தேதி சாக்கடையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது மனைவி ஷிவானியிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, தனது கள்ளக்காதலன் சிபுவுடன் சேர்ந்து கணவனை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து ஷிவானி, அவரது கள்ளக்காதலன் சிபு, கொலைக்கு உதவியாக இருந்த ஹிமன்சு, லக்மிர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சிவம் மற்றும் மோகித் ஆகியோருக்கு இந்த கொலையில் எந்த தொடர்பும் இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    விராலிமலை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா தேராவூர் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரி மகன் குமார்(வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கு கோமதி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். கணவன், மனைவி இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது. 

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த குமார், கோமதியுடன் தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த கோமதி வீட்டில் கிடந்த அரளைக்கல்லை தூக்கி குமாரின் தலை மீது போட்டார். இதில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மீது மனைவி அரளைக்கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கணவனை அடித்துக் கொன்று விபத்து என்று நாடகமாடிய மனைவியை கள்ளக்காதலனுடன் போலீர் கைது செய்தனர்.
    பாப்பாரப்பட்டி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சிட்லகாரம்பட்டியை சேர்ந்த மணி என்பவரது மகன் வெங்கடேசன் (வயது 23) கட்டிட தொழிலாளியான இவருக்கும், கானாப்பட்டியை சேர்ந்த முனுசாமி என்பவரது மகள் முனியம்மாளுக்கும் (20) கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கடந்த மாதம் 26-ந்தேதி வெங்கடேசன் தனது மனைவி முனியம்மாளுடன் கானாப்பட்டியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். மாமியார் வீட்டில் விருந்து சாப்பிட்டு விட்டு அன்று இரவு வெங்கடேசன், தனது மோட்டார் சைக்கிளில் மனைவி முனியம்மாளை ஏற்றிக் கொண்டு ஊருக்கு திரும்பினார்.

    இந்த நிலையில் வெங்கடேசன் ஒன்னப்ப கவுண்டனஅள்ளி மயானம் அருகில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இது குறித்து போலீசார் முனியம்மாளிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது முனியம்மாள் கூறும்போது, தனது கணவர் வெங்கடேசன் மோட்டார் சைக்கிள் விபத்து ஏற்பட்டதில் இறந்தார் என கூறினார். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இறந்து போன வெங்கடேசனின் தங்கை அருள்ஜோதி என்பவர் தனது அண்ணன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பாப்பாரப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வெங்கடேசன் மரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த விசாரணையில், வெங்கடேசனின் மனைவி முனியம்மாளிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது முனியம்மாள் முன்னுக்குப்பின் முரணாக வாக்குமூலம் அளித்தார். இதனால் முனியம்மாள் வெங்கடேசனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.

    போலீசாரின் தீவிர விசாரணையில் முனியம்மாள் திருமணத்துக்கு முன்பே கானாப்பட்டியை சேர்ந்தவரும், சென்னையில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக பணியாற்றி வரும் விஜய் (22) என்பவரை காதலித்து வந்ததும் திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கிடையில் பழக்கம் நீடித்து வந்ததும் தெரிந்தது.

    சம்பவத்தன்று தனது கணவர் வெங்கடேசனுடன் தான் பைக்கில் வருவதாக தனது கள்ளக்காதலனுக்கு தகவல் தெரிவித்தார். தயாராக காத்திருந்த கள்ளக்காதலன் விஜய் ஓ.ஜி.அள்ளி மயானம் அருகே வெங்கடேசன் ஓட்டி வந்த பைக்கை மறித்து இரும்பு பைப்பால் வெங்கடேசனை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன் உயிரிழந்தார். பின்னர் விஜய் அங்கிருந்து தப்பியோடியதும் விபத்தில் இறந்ததாக முனியம்மாள் நாடகம் ஆடியதும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து விஜய் மற்றும் முனியமமாள் ஆகிய இருவரையும் பாப்பாரப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை பென்னாகரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    சேலம் அருகே தோசை சட்டியால் அடித்து கணவரை கொலை செய்த மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார். #HusbandMurdered
    கருப்பூர்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள உப்புகிணறு, பார்வதி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 38). இவருடைய மனைவி ஐஸ்வர்யா (38). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    செல்வகுமார் கருப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஜி.டி.பி. கிரானைட் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் வேலையை விட்டு நின்று விட்டார்.

    கடந்த 10-ந்தேதி அவர் திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் கடந்த 15-ந்தேதி இது குறித்து செல்வகுமாரின் தந்தை மாது, தாய் பாப்பா ஆகியோர் ஐஸ்வர்யாவிடம் கேட்டனர். அதற்கு அவர், கணவர் வேலையை விட்டு நின்றதற்கான பணத்தை வாங்குவதற்காக தொழிற்சாலைக்கு சென்றுள்ளார் என்று தெரிவித்தார்.

    நேற்று மதியம் வீட்டின் அருகே கிணற்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. உடனே உறவினர்கள் கிணற்றுக்குள் எட்டி பார்த்தபோது கிணற்றுக்குள் செல்வகுமார் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரது உடலை கருப்பூர் போலீசார், ஓமலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கொலை செய்து கிணற்றில் வீசியதாக கூறி ஐஸ்வர்யா கருப்பூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    அப்போது அவர், போலீசாரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    எனக்கு சொந்த ஊர் கருப்பூர் அடுத்த வெள்ளாளப்பட்டி பகுதி ஆகும். எனது பெற்றோர் கருப்பூர், உப்புகிணறு, பார்வதி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வார்கள். இதில் செல்வகுமாரின் பெற்றோருக்கும், எனது பெற்றோருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இதன் மூலம் நன்கு தெரிந்தவர்கள் என்ற முறையிலும், பக்கத்து ஊர் என்பதாலும் எனக்கும், செல்வகுமாருக்கும் சம்பந்தம் பேசி திருமணம் செய்து வைத்தனர். இரு வீட்டார் பெற்றோர் முன்னிலையில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இந்த திருமணம் நடந்தது.

    செல்வகுமாரின் சொந்த ஊர் மேச்சேரி அருகே உள்ள நரியனூர் பகுதியாகும். குடும்பத்துடன் அவர்கள் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பார்வதி தோட்டம் பகுதியில் குடியேறி விட்டனர். கருப்பூர் பகுதியில் உள்ள ஜி.டி.பி. கிரானைட் நிறுவனத்தில் செல்வகுமார் வேலை பார்த்து வந்தார்.

    திருமணம் முடிந்த உடனே தனிக்குடித்தனம் நடத்த முடிவு செய்து, அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகை வீடு எடுத்து, அங்கு இருவரும் குடியேறினோம். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. மூத்த மகள் கரும்பாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்து வருகிறாள். எனது கணவருக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்ப செலவு மற்றும் மகள் படிப்பு செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன்.

    எங்களது வீட்டின் அருகே மாமனார் மாது, மாமியார் பாப்பா ஆகியோர் குடியிருந்து வருகிறார்கள். அவர்களிடம் இருந்து அடிக்கடி குடும்ப செலவுக்கு பணம் வாங்கி வந்தேன். அவர்களிடம் இருந்து குடும்ப செலவுக்கு எத்தனை நாட்களுக்குத் தான் பணம் வாங்கி முடியும்.

    இதனால் நான், செல்வகுமாரிடம் உங்களுக்கு போதிய சம்பளம் இல்லாததால், நீங்கள் கிரானைட் தொழிற்சாலையில் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லுங்கள் என்று கூறினேன். இதனால் செல்வகுமார், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராஜினாமா எழுதி கொடுத்து விட்டு வேலையை விட்டு நின்று விட்டார். பின்னர் வேறு வேலையும் கிடைக்கவில்லை. வீட்டிலேயே இருந்து வந்தார். தொழிற்சாலையில் வேலையை விட்டு நின்றதற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பணம் மற்றும் சர்வீஸ் பணம் ஆகியவை செல்வகுமாருக்கு வர வேண்டி உள்ளது. இந்த பணத்தை போய் வாங்கி வாருங்கள் என்று நான் வற்புறுத்தினேன் ஆனால் அவர் மறுத்து விட்டார். அந்த பணம் எனது 2 குழந்தைகளுக்கும் என்றார்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் ரவி என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் அன்பாக பேசி பழகி வந்தார். அவரிடம் எனது வீட்டில் உள்ள குடும்ப பிரச்சினைகள் குறித்து தெரிவித்தேன். அதற்கு அவர், உனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறேன் என்றார்.

    முதலில் நாங்கள் இருவரும் நட்பாக தான் பழகினோம். பின்னர் நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் நான் வீட்டில் இருந்து தினமும் மணிக்கணக்கில் செல்போனில் அவரிடம் பேசி வந்தேன்.

    இந்த நிலையில் தோழி ஒருவரும் அடிக்கடி என் வீட்டிற்கு வந்து ரவி பற்றி பேசி அவர் மீது ஆசையை மேலும் வளர்க்கும் வகையில் எனது மனதை மாற்றி வந்தார்.

    இதனிடையே தினமும் காலையில் எனது மகளை அழைத்து சென்று பள்ளியில் விட்டு வரும்போது என்னுடன் பேசுவதற்காக அதே பகுதியில் கள்ளக்காதலன் காத்திருப்பார். அவருடன் நீண்ட நேரம் பேசி பழகி வந்தேன்.

    எங்களது இந்த கள்ளக்காதல் விவகாரம் எனது கணவருக்கு தெரியவந்தது. அவர் என்னை கண்டித்தார். அந்த வாலிபருடன் பழகாதே, அவன் நல்லவன் கிடையாது. உன்னை ஏமாற்றுகிறான் என்று கூறினார். மது குடித்து வந்தும் செல்வகுமார் தகராறில் ஈடுபட்டார்.

    தீபாவளி பண்டிகைக்கு முன்தினம் எனக்கும், செல்வகுமாருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதனால் மாமனார், மாமியாரிடம் எனக்கு உங்களது மகனுடன் வாழ பிடிக்கவில்லை என்று கூறினேன். அவர்கள், இது எல்லா வீட்டிலும் நடக்கிறது தான் என்று கூறி சமாதானம் செய்து வைத்து வந்தனர்.

    இதையடுத்து நான், கணவருக்கு சரியாக உணவு கொடுக்காமல் இருந்து வந்தேன். தொடர்ந்து வீட்டில் சண்டை நடந்து வந்ததால் இது பற்றி ரவியிடம் கூறி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் செல்வகுமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இதற்கான திட்டத்தை ரவி வகுத்து கொடுத்தார். அதன்படி கள்ளக்காதலனுடன் சேர்ந்து சம்பவத்தன்று தோசை சுடும் இரும்பு சட்டியை எடுத்து செல்வகுமாரின் தலையில் ஓங்கி அடித்தோம். இதில் அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அப்படியே அவரை தூக்கிக் கொண்டு வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கொண்டு போய் போட்டோம். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் நான், எதுவும் தெரியாததை போல் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டேன். கடந்த 15-ந்தேதி கருப்பூர் போலீஸ் நிலையத்தில் எனது கணவர் மாயமாகி விட்டதாகவும், அவரை மீட்டு தாருங்கள் எனவும் ஒரு பொய்யான புகாரை கொடுத்து நாடகம் ஆடினேன். ஆனால் போலீசாரின் அதிரடி விசாரணையில் சிக்கிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் ரவி போலீசாரிடம் சிக்கினார். போலீசார் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #HusbandMurdered

    அரக்கோணம் அருகே போதையில் தகராறு செய்த கணவனை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த மோசூரை சேர்ந்தவர் பிரபு (வயது 30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி லட்சுமி (27). தம்பதிக்கு ஜோதி (8) என்ற மகள், சூர்யா (7) என்ற மகன் உள்ளனர்.

    பிரபுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து லட்சுமியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று இரவு போதையில் வீட்டுக்கு வந்த அவர் தகராறு செய்து அவரது மனைவியை அடித்து உதைத்தார். அக்கம் பக்கத்தினர் வந்து அவரை சமாதானம் செய்து வைத்தனர்.

    நள்ளிரவு வரை தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி துப்பட்டாவால் பிரபுவின் கழுத்தை இறுக்கினார். மூச்சு திணறல் ஏற்பட்டு பிரபு துடிதுடித்து இறந்தார்.

    பின்னர் வீட்டுக்குள் இருந்தபடி லட்சுமி கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்றனர். அங்கு பிரபு பிணமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பிரபுவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து லட்சுமியை கைது செய்தனர். கணவர் குடிபோதையில் அடித்து உதைத்ததால் ஆத்திரத்தில் துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கிவிட்டதாக லட்சுமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    இதனால் அவர்களது மகன், மகள் தவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தருமபுரி அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரின் தொல்லை தாங்க முடியாமல் மனைவி கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள தேவர்ஊத்துபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 62). விவசாயி.

    இவரது மனைவி கன்னியம்மாள். இவர்களுக்கு சுகுணா (37) என்ற மகள் உள்ளார். சுகுணாவை வடிவேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். சுகுணா தனது கணவருடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

    கணேசனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது மனைவி கன்னியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று இரவு கணேசன் குடித்துவிட்டு வந்து மீண்டும் கன்னியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கன்னியம்மாள் மறைந்து வைத்திருந்த கட்டையை எடுத்து கணேசனின் தலையில் அடித்தார். இதில் கணேசன் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.

    சிறிது நேரத்தில் கணேசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அவர் இறந்ததும் அதனை கண்டுகொள்ளாமல் கன்னியம்மாள் வீட்டின் அருகில் உள்ள அறையில் தூங்க சென்றார்.

    இன்று காலை விடிந்ததும் கணேசன் அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அங்கு இருந்த கன்னியம்மாளிடம் அவர்கள் கேட்டபோது, தான் கணேசனை கட்டையால் தாக்கியதால் இறந்து விட்டதாக கூறினார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் பிடித்து வைத்து அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்தவுடன் கன்னியம்மாளை அக்கம்பக்கத்தினர் ஒப்படைத்தனர். பிணமாக கிடந்த கணேசனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கன்னியம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தினமும் குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் கட்டையால் அடித்து கொன்றேன் என்று கூறினார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர். #tamilnews
    ஆபாச வீடியோ காண்பித்து செக்ஸ் தொல்லை கொடுத்த கணவரை கொன்ற மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள டி.வாடிப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் பழ வியாபாரம் பார்த்து வந்தார். கடந்த 2 -ந் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

    இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரது குடும்பத்தினரே கொலை செய்தது தெரிய வரவே அவர்களை கைது செய்தனர்.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    முருகனுக்கும், கலைச்செல்வி (38) என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மாரிச்செல்வி (19) என்ற மகளும், ஆனந்தகுமார் (16) என்ற மகனும் உள்ளனர்.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான முருகன் தினசரி போதையில் தனது மனைவியிடம் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் செல்போனில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அதேபோல தனது மனைவியிடம் உறவு கொள்ள வேண்டும் என வற்புறுத்தி உள்ளார்.

    இதனால் மனைவி கலைச்செல்வி தனது கணவருடன் பேசுவதையே தவிர்த்து வந்துள்ளார். இதனிடையே தனது மகள் மலர்ச்செல்வி கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கோபித்துக் கொண்டு கைக்குழந்தையுடன் தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    கணவரின் செக்ஸ் தொல்லை குறித்து மகளிடமும், 10-ம் வகுப்பு படிக்கும் தனது மகனிடமும் கூறி கலைச்செல்வி அழுதுள்ளார். கடந்த 31-ந்தேதி இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த முருகன் தகராறு செய்துள்ளார்.

    பின்னர் தனது மனைவி என நினைத்து மகளை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ந்துபோன குடும்பத்தினர் தங்கள் மனதை கல்லாக்கிக்கொண்டு கொலை செய்ய முடிவு செய்தனர்.

    கலைச்செல்வியும் அவரது மகளும் கை, கால்களை பிடித்துக்கொள்ள ஆனந்தகுமார் கத்தியை எடுத்து தனது தந்தையின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளில் இறந்துபோன தனது தந்தையின் உடலை எடுத்துக்கொண்டு தன்னுடன் படிக்கும் நண்பரான முகேஷ் குமார் என்ற முனியாண்டி (16) என்பவர் உதவியுடன் தோட்டத்தில் வீசி விட்டு சென்று விட்டனர்.

    கொலை செய்யப்பட்ட முருகனின் உடலை போலீசார் எடுத்து கண்டுபிடித்தவுடன் கலைச்செல்விக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பீதி ஏற்பட்டது. போலீசார் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் கிராம நிர்வாக அலுவலரிடம் தஞ்சம் அடைந்தனர்.

    நடந்த விபரங்களை போலீசாரிடம் பின்னர் தெரிவித்துள்ளனர். கைதான கலைச்செல்வி மற்றும் மலர்செல்வியை மதுரை சிறையிலும், ஆனந்தகுமார் மற்றும் முகேஷ்குமாரை மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.
    ×